Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கூடலூர் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பந்தலூர் தாலுகா கொளப் பள்ளியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 46). இவர் காங்கிரஸ் கட்சி பந்தலூர் வட்டார தலைவராகவும், சேரங் கோடு ஊராட்சி துணை தலை வராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த 2011ம் ஆண்டு அ.தி.மு.க. கட்சியில் இணைந்துடன் கூடலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் தேர்வு செய்யப் பட்டார்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 6ந் தேதி கூடலூரில் நடைபெற்ற கோடை விழாவில் கலந்து கொள்வதற்காக கொளப்பள்ளியில் இருந்து தனது வண்டியில் தங்கவேலு கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பந்தலூர் அருகே தேவகிரி பகுதியில் வளைவான சாலையில் மர்ம கும்பல் அவருடைய வண்டியை வழிமறித்தது. பின்னர் தங்கவேலுவை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

இந்த சம்பவம் குறித்து தேவாலா காவல்துறை வழக்கு பதிவு செய்து குன்னூர் கேத்தி பகுதியை சேர்ந்த ஜான்சன் (வயது 37), சம்பத் (26), தூத்துக்குடியை சேர்ந்த விமல் கவாஸ்கர் (29), விமல் ஆனந்த் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் ஆசைத்தம்பி (40) என்பவரை காவல்துறை வலை வீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் தேவாலா காவல்துறை ஏட்டுகள் பிரபாகரன், ஸ்ரீஜன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ரகசிய தகவலின் பேரில் திருநெல்வேலி பாளையங் கோட்டைக்கு சென்றனர்.

காவல்துறை நடத்திய விசாரணையில், அ.தி.மு.க. பிரமுக ரின் கொலை வழக்கில் தேடப் பட்டு வந்த ஆசைத்தம்பி, துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையொட்டி உள்ளூர் காவல்துறை உதவியுடன் வழக்கறிஞர் ஆசைத்தம்பியை தேவாலா காவல்துறை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் கூடலூர் தேவாலா காவல்துறை நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post