"துப்பாக்கி" படத்தின் வெற்றியை தொடர்ந்து தன் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் இன்று கலந்து கொள்ளவுள்ளார் விஜய்.ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் அமலா பால்.
அத்தோடு எப்போதுமே இயக்குனர் விஜயின் படங்களில் பணியாற்றும் நீரவ் ஷா மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரும் இப்படத்திலும் விஜயுடன் சேர்ந்து பணியாற்றவுள்ளனர்.
இதற்கிடையே கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.எல்லா விடயங்களும் ஒத்துப்போகும் பட்சத்தில் கே.வி.ஆனந்த் படத்தில் விஜய் நடிப்பது சாத்தியமாகலாம் என தெரிகிறது.பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனத்திலேயே இப்படம் படமாக்கப்படவுள்ளதால் இப்போதே கதை வசனம் எழுத ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு "சூப்பர் குட் பிலிம்ஸ்" பட நிறுவனம் தயாரிக்கும் புதுமுக இயக்குனர் நேசன் இயக்கும் படமொன்றிலும் விஜய் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.