Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாவீரர் நாள் அன்று அரசியல் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்-படையினர் அச்சுறுத்தல்!


கிளிநொச்சியில் மாவீரர் நாளில் அரசியல் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையேல் நடைபெறும் விளைவுகளுக்கு படையினை குற்றம் கூறி எந்த பயனும் இல்லை என்று கடுமையாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில் இலங்கை படையினர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பது போல் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை படை படைமுகாமிற்கு அழைக்கப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மாவீரர் நாளில் வெளியில் எங்கும் திரியாமல் வீடுகளில் அடங்கி இருக்குமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அக்கராயன் பிரதேச அமைப்பாளரான ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த குணரட்ணம் சர்வானந்த் (வயது 31) நேற்று காலை அப்பகுதி இலங்கை படைமுகாமிற்கு அழைத்து கடுமையான அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இலங்கை படை படைமுகாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார். படைமுகாமில் வைத்து மாவீரர் நாளில் அரசியல் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையேல் நடைபெறும் விளைவுகளுக்கு படையினரை குற்றம் கூறி எந்த பயனும் இல்லை என்று கடுமையாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.



[vuukle-powerbar-top]

Recent Post