Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒபாமாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஒபாமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளும் ஒத்துழைப்பும் மேலும் வலுவடைவதை எதிர்பார்க்கிறேன் என்றும் கூறினார்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்த ஒபாமா, இந்தியா அமெரிக்காவின் மிகச்சிறந்த பங்குதாரராக உள்ளது என்றும், உங்களுடன் இணைந்து செயல்பட மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் கூறினார்.

இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post