Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம்

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா மறுத்ததற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறுகையில், கர்நாடக அரசின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், கர்நாடகத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என்றார். தமிழகத்தில் கருகும் நிலையில் உள்ள சம்பா பயிர்களுக்கு, மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் இல.கணேசன், கர்நாடக அரசு மனிதாபிமான முறையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவின் இந்த முடிவு மிகவும் வேதனை அளிப்பதாகவும் இல.கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post