Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புகையில்லா தீபாவளி கொண்டாடுவோம் - சென்னை மெரீனா கடற்கரையில் பரப்புரை (படங்கள்)


இன்று சென்னை மெரினா கடற்கரையில் புகையில்லா தீபாவளியை கொண்டாடுமாறு தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பு பரப்புரை ஒன்று மேற்கொண்டது. பட்டாசுகள் தவிர்ப்போம் இயற்கையை பாதுகாப்போம் என்ற செய்தியை மக்களுக்கு எடுத்தச் சென்றனர் பண்பாட்டு நடுவத்தின் தோழர்கள்.

ஏன் நாம் பட்டாசுகள் தவிர்க்க வேண்டும் என்ற செய்தியை துண்டறிக்கை மூலம் அச்சிட்டு மக்களுக்கு விநியோகம் செய்தனர். தொலைக்காட்சி ஊடகங்களும் இந்நிகழ்வை பதிவு செய்தனர். இயற்கையை மாசுபடுத்தும் ரசாயனம் கலந்த நச்சுக் காற்றை பட்டாசுகள் வெளியிடுவதால் காற்று மண்டலம் மாசுபடுகிறது அதனால் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஆயிரக்கணக்காண மக்களிடம் துண்டறிக்கை கொடுத்தனர். புகையில்லா தீபாவளி கொண்டாடுவோம் என்ற பதாதை ஏந்தி கடற்கரை நெடுகிலும் நடந்து சென்று மக்கள் பார்க்கும் படி பரப்புரை செய்தனர் இந்த அமைப்பினர். பலரும் இந்த செயலை வெகுவாக பாராட்டினர். பட்டாசுகள் வெடிக்க மாட்டோம் என பலரும் உறுதியும் அளித்தனர். இதையே தொடர்ந்து  பல ஊர்களில் பரப்புரை மேற்கொண்டால் நிச்சயம் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கலாம். மாசற்ற தீபாவளி கொண்டாடலாம் . இயற்கையை பாதுகாக்கலாம். 

கடற்கரையில் கொடுக்கப்பட்ட துண்டறிக்கை செய்தி வருமாறு: 

 இனியும் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கனுமா? என்றோ இறந்துபோன ஓர் அரக்கனின் மரணத்தைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் இத்தனை மனிதர்கள் சாக வேண்டுமா? மேலும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டுமென்று எந்த சாஸ்திரம் சொல்கிறது? சிவகாசி அருகே பட்டாசு தொழிலில் உயிர் இழப்பு இம்முறை சாவு எண்ணிக்கை - 40. இதையும் தாண்டி பட்டாசு தொழிலில் ஈடுபடும் குழந்தை தொழிலாளிகள். இவர்களுக்கு ஏற்படும் உடல் நலக் குறைவு, கல்வி இல்லாத நிலை. இவற்றை தடுப்பதற்கு நாம் பட்டாசுகளை வாங்குவதை நிறுத்த வேண்டும். இதில் பயன்படுத்தும் இராசயனங்களால் சிவகாசியின் சுற்றுப்புற சூழல் சீரழிந்து கொண்டு வருகிறது. பட்டாசை உற்பத்தி செய்யும் இடம் மட்டுமில்லாது அதை வெடிக்க வைத்து கரியாக்கும் இடங்களிலும் வாழும் உயிரனங்களும் பறவையினங்களும் அழிந்து வருகிறது. இதன் மூலம் பூமியை காக்கும் ஓசோன் படலமும் பாதிப்படைகிறது. 

குழந்தைகள் மட்டுமில்லது ஆஸ்துமா நோயாளிகளையும் இது அதிக அளவில் பாதிக்கிறது. இயற்கை வழியில் விவசாயம் நடைபெற வேண்டுமானால் முதலில் இயற்கைக்கு தீங்கிழைக்கும் செயல்களை செய்யாதீர்! சிந்திப்போம்! செயல்படுவோம்!!!  – இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் 

 ஆகவே தோழர்களே நஞ்சை கக்கி சுற்றுப் புற சூழலை மாசு படுத்தும் பட்டாசுகளை தவிர்ப்போம். புகையில்லா தீபாவளியை கொண்டாவோம். தீபாவளி என்பது தீப ஒளித் திருநாள். அந்நாளில் இல்லங்களில் தீபம் ஏற்றி கொண்டாடுங்கள். பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவதை தவிருங்கள். பட்டாசுகள் தவிர்ப்போம். இயற்கையை பாதுகாப்போம்.


























[vuukle-powerbar-top]

Recent Post