Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரை மேலூர் பகுதியில் சுகாதார துறை அமைச்சர் ஆய்வு

மதுரையில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாகியுள்ள நிலையில், மேலூர் பகுதியில் இன்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மேலூர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பணியின் போது அலட்சியமாக இருந்த 3 மருத்துவமனை ஊழியர்களுக்கு அமைச்சர் மெமோ வழங்கினார்.

பின்னர் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜய் : மதுரையில் டெங்கு காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் அரசு மருத்துவமனையில் டெங்கு பரிசோதனைக்கான எலீசா சோதனை செய்து கொள்ள போதிய வசதிகள் இருப்பதாகவும், தேவையான அளவு ரத்தம் ரத்த வங்கிகளில் சேமிக்கப்பட்டு வைத்திருப்பதாகவும் கூறினார்.

இருப்பினும் மதுரை மற்றும் மேலூரில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கும் நிலையில் 17 பேர் மட்டுமே பலியாகியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் டெங்கு காய்ச்சலுக்கு மதுரை திருப்பத்தூரைச் சேர்ந்த கோகிலா என்ற 10 வயது சிறுமி பலியாகியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post