Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அஜீத்துக்காக சிம்பு மற்றும் நயன்தாரா.


விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அஜித்துக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் நடித்து வரும் ஆர்யா மற்றும் நயன் ஆகியோர் அச்சமயம் அவ்விடத்தில் இல்லாத போதும் இவ்விபத்து குறித்த செய்தி கிடைத்ததும்,உடனடியாக அஜித்தை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு அஜித்தின் நலனை விசாரித்துள்ளனர்.

அஜித்தின் மிக பெரிய விசிறியான சிம்பு மற்றும் அஜித்தை வைத்து "மங்காத்தா"படத்தை இயக்கிய  வெங்கட் பிரபு ஆகியோரும் அஜித்தை தொடர்புகொண்டு அவரின் நலன் குறித்து விசாரித்துள்ளனர்.

தற்போது உடல் நலம் தேறிய நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் அஜித்.

[vuukle-powerbar-top]

Recent Post