Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வைகோ தன்னை புறக்கணிப்பதாக நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தம்மை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளாக வைகோவின் கரங்களை வலுப்படுத்த பாடுபட்டு வந்த தனது உழைப்புக்கு எந்தவித மதிப்பும் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வைகோவின் தூண்டுதலின் பேரிலேயே மதிமுக கட்சிப் பத்திரிகையான சங்கொலியில் தன்னைப் பற்றி அவதூறாக எழுதப்பட்டு வருவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னுடைய உருவ பொம்மைகளை மதிமுகவினர் எரித்ததற்கும் வைகோதான் காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.

தனது அரசியல் எதிர்காலம் குறித்து எந்தவிதமான முடிவையும் தான் இதுவரை எடுக்கவில்லை என்று கூறியுள்ள அவர், மதிமுக தற்போது கட்டுப்பாடிழந்த கட்சியாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.

வைகோவுக்கும், நாஞ்சில் சம்பத்துக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாஞ்சில் சம்பத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைகோ தரப்பு விளக்கத்தை பெற புதிய தலைமுறை முயன்றது. ஆனால், நமது தொலைபேசி அழைப்பை அவர் ஏற்கவில்லை.
[vuukle-powerbar-top]

Recent Post