Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வொசிங்டன் வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமெரிக்கா மீண்டும் அழைப்பு

வொசிங்டனுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமெரிக்கா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். 

அமெரிக்காவின் அழைப்பை அடுத்து தமது கட்சி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

இதன்போது இலங்கை அரசுடனான அரசியல் பேச்சுக்களின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசப்படும் என்றும், அவர் தெரிவித்துள்ளார். 

எனினும் அமெரிக்கப் பயணத்துக்கான நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் மேலும் கூறியுள்ளார். 

அதேவேளை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடருக்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்கா பேச்சு நடத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா வொசிங்டனுக்கு அழைத்துப் பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post