Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் விவாதம்

அந்நிய நேரடி முதலீடு விவகாரம் தொடர்பாக, ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை தவிர்ப்பதற்காக பா.ஜ., வை சமாதானப் படுத்தும் காங்கிரஸ் கட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்தது தி.மு.க. இதனைத் தொடர்ந்து நேற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான கூட்டணி கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தன.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சில்லறை வணிகத்தில் அந்நிய ரேநடி முதலீடு குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு தயார் என பகிரங்கமாக அறிவித்தது. இருப்பினும் இந்த விவகாரத்தில் ஓட்டெடுப்பு இல்லாமல் விவாதம் மட்டும் நடத்தினால் சாதகமாக இருக்கும் என்பதால் பா.ஜ., வை சமாதானப் படுத்த முயற்சித்தது காங்கிரஸ். இதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர் கமல்நாத் இன்று அருண் ஜெட்லியையும், சுஷ்மா ஸ்வராஜையும் சந்தித்துப் பேசினார்.

ஆனால் பா.ஜ., சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்த விவகாரத்தில் ஓட்டெடுப்புடன் விவாதம் நடத்துவதையே விரும்புவதாக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. விதி ணெ் 184ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என உறுதிபட தெரிவித்து விட்டது.

எனவே காங்கிரஸ் அடுத்த வாரத்தில் இவ்விவகாரம் குறித்த விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு விவகாரத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்துவது குறித்து, பாரதிய ஜனதா உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், கட்சி தலைவர் நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்கா, வெங்கையா நாயுடு, முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில் பாரதிய ஜனதா எடுத்துள்ள நிலை குறித்து அத்வானி விளக்கினார்.
[vuukle-powerbar-top]

Recent Post