Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விஜய்யை பாராட்டிய அஜித்.


அண்மையில் வெளியான "துப்பாக்கி" படமானது திரைக்கு வந்த நாளிலிருந்து மிக பெரிய வரவேற்புடன் அது திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் நிறைந்த காட்சிகளாக திரையிடப்பட்டு வருவதால் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர் முருகதாஸ் மற்றும் விஜய்.

இப்படத்தின் காட்சியை அண்மையில் பார்த்த அஜித், விஜய் மற்றும் முருகதாசை புகழ்ந்து தள்ளியுள்ளார்.உண்மையிலேயே அவர்களின் உழைப்பு மிக அபாரமாக வந்திருப்பதாகவும் நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றியை பெறும் எனவும்  கூறியுள்ளார் அஜித்.

அஜித்தின் இந்த எதிர்பாராத வாழ்த்துக்களால் திக்கு முக்காடி போயுள்ளனர் விஜய் மற்றும் முருகதாஸ்.தமிழ் சினிமாவில்  சமகாலத்தில் பிரகாசித்து வரும் இரண்டு நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் தங்கள் நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள்.

விஜய் நடிப்பை அஜித் பாராட்டியுள்ளது அவர்கள் இருவரது விசிறிகளுக்கும் மிகுந்த வியப்பையும் சந்தோசத்தையும் அளித்துள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post