Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிறை அதிகாரிகளிடம் உள்ள துப்பாக்கிகளை பறிக்க இலங்கை பாதுகாப்பு அமைச்சு முடிவு

சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்ள துப்பாக்கிகள் அனைத்தையும் மீளப்பெறுவதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. 

அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில், இடம்பெற்ற கலவரத்தின் போது அங்கிருந்த ஆயுதக்களஞ்சியத்தை கைதிகள் உடைத்து, 90 துப்பாக்கிகளை கைப்பற்றிய சம்பவத்தை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, 

“எல்லா ஆயுதங்களையும் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். 

விடுதலைப் புலிகளுக்கு எதமிரான போர் நடந்து கொண்டிருந்தபோது, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தன்னியக்க ஆயுதங்கள் வழங்குவதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன். 

ரி-56 துப்பாக்கி போன்ற தன்னியக்க ஆயுதங்களை கவனமாக கையாளவேண்டும். 

தவறாக கையாளப்பட்டால், அப்பாவி உயிர்களை இழக்க வேண்டியிருக்கும்.” என்று தெரிவித்துள்ளார். 

அதேவேளை, தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத சிறைச்சாலை அதிகாரி ஒருவர், தமது சொந்தப் பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் அவசியம் என்று கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post