Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீரா குமார் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார்.

இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளார். மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பாராளுமன்றம் நாளை தொடங்குகிறது.

பாராளுமன்றம் சுமுகமாக நடப்பது குறித்து, பேச்சுவார்த்தை நடத்த மக்களவை சபாநாயகர் மீரா குமார் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி இன்று கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, கமல்நாத், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்பட அனைத்து தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post