Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கசாப்புக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது ~ இதுவரை நடந்தது

மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ந் தேதி 10 பேர் கொண்ட தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் கசாப் தவிர மற்ற அனைவரும் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். கசாப்பை போலீசார் கைது செய்தனர். சிறை காவலில் இருந்த தீவிரவாதி அஜ்மல் கசாப்பிற்கு இன்று காலை 7.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த நவம்பர் 8ந்தேதி கசாப் மரண தண்டனை குறித்த ஆவணத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிர அரசு கையெழுத்திட்டது.

அன்றைய தினமே நவம்பர் 21ல் கசாப்பை தூக்கிலிட முடிவு செய்யப்பட்டது என மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே இன்று தெரிவித்துள்ளார். தூக்கில் போடப்படுவதற்கு முன் நிகழ்ந்த சம்பவங்கள் வருமாறு:

* நவ.26, 2008: மும்பைக்குள் இரவு 8 மணியளவில் 10 பேர் கொண்ட தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த தயாராகினர்.

சத்ரபதி சிவாஜி ரெயில்வே நிலையத்திற்குள் தீவிரவாதிகள் அஜ்மல் கசாப் மற்றும் தேரா இஸ்மாயில் கான் ஆகியோர் உட்புகுந்தனர். அங்கு அவர்கள் நடத்திய தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.

* பின்னர் இரவு 11 மணியளவில் கமா மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து 3 மூத்த மும்பை போலீஸ் அதிகாரிளான ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர் மற்றும் அஷோக் காம்தே ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அவர்கள் பயணம் செய்த வாகனத்தை கடத்தி சென்றனர்.

* நவ.27 2008: ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த கசாப் கிர்காம் சவுபட்டி பகுதியில் ஆயுதங்கள் இன்றி பதுங்கியிருந்தபோது போலீஸ் அதிகாரி துக்காராம் ஓம்பாலே என்பவர் கைது செய்து நாயர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

* நவ.29 2008: தாக்குதலில் தனது பங்கு குறித்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

* டிச.27 2008: மும்பையில் ஆர்தர் சாலை ஜெயிலில் கசாப்பை அடைக்க உத்தரவிடப்பட்டது. கசாப்பின் பாதுகாப்பிற்காக மட்டும் ரூ.19 கோடி அளவிற்கு அரசு செலவு செய்தது.

* ஜன.16, 2009: மும்பை சிறைச்சாலையிலேயே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

* பிப்.25 2009: இந்தியாவுக்கு எதிரான தாக்குதல், கொலை மற்றும் தீவிரவாத சட்டப்படி கசாப்பிற்கு எதிராகவும் மற்றும் இருவருக்கு எதிராகவும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

* ஜூலை 20 2009: சிறப்பு நீதிபதி தஹலியாணி முன்பு ஆஜரான கசாப் லஷ்கர் தீவிரவாத அமைப்பு அனுப்பியவர்களில் தானும் ஒருவன் என்று கோர்ட்டில் அளித்த் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

* மே 6 2010: மும்பை சிறப்பு நீதிமன்றம் கசாப்பிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட இரு இந்திய குற்றவாளிகள் சபாவுதீன் அகமது மற்றும் பாஹீம் அன்சாரி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். சில நாட்கள் கடந்த பின்னர் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கசாப் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

* பிப்.21 2011: மும்பை நீதிமன்றம் கசாப்பிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது. இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததுடன் இந்த வழக்கில் தான் முறையாக விசாரிக்கப்படவில்லை என கசாப் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

* செப்.22 2011: வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என கசாப் கூறியதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம், மூத்த வக்கீலான ராஜூ ராமச்சந்திரனை கசாப் தரப்பில் வாதாட நியமனம் செய்ததுடன் நீதிபதி அப்தப் ஆலம் தலைமையிலான பெஞ்ச் மேற்கொள்ளும் விசாரணைக்கு உதவிட கேட்டு கொள்ளப்பட்டார்.

* ஆகஸ்ட் 29 2012: சுமார் 2 1.2 மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் கசாப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

* நவ 5 2012: இதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்டதாக உள் துறை செயலாளர் ஆர்.கே. சிங் தகவல் தெரிவித்தார்.

* நவ 17 2012: தூக்கிலிடப்படுவது குறித்து கசாப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் தூதரகத்திற்கும் இது பற்றி இந்திய அரசாங்கம் தகவல் தெரிவித்தது.

* நவ 19 2012: கசாப் புனேவில் உள்ள ஏர்வாதா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு தூக்கு போடும் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார்.

* நவ 21 2012: மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பிற்கு எரவாதா சிறைச்சாலையில் இன்று அதிகாலை 7.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post