Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

யாழில் தமிழ் மாணவி மீது சிங்களவர்கள் தொந்தரவு!


இது மகிந்தவின் ஆட்சி யாழில் மாணவி மீது தொந்தரவு செய்த சிங்கள இளைஞர்களுக்கெதிராக தட்டிக்கேட்ட தமிழ் இளைஞர்கள் மீது சிறீலங்கா காவல்துறையினன் அச்சுறுத்தல்.
தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவியொருவருடைய மேல் ஆடைக்குள்ளே கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை எழுதிப் போட்ட சிங்கள இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தமிழ் இளைஞர்களைப் சாவகச்சேரிப் பகுதி காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.
தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவியொருவரை பின் தொடர்ந்து மதிவண்யில் சென்ற வீதி வேலை செய்யும் சிங்கள இளைஞர்கள் இருவர் மாணவியின் சட்டையின் மேல் பகுதிக்குள்ளே கடதாசித் துண்டொன்றில் தமது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை எழுதி போட்டுள்ளனர்.
இதனைத் தொலைவில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி சாரதிகளான சில தமிழ் இளைஞர்கள் குறித்த சிங்கள இளைஞர்களை அதட்டி விசாரித்துள்ளனர்.
இச்சம்பவங்களையெல்லாம் சற்றுத் தொலைவில் அவதானித்துக் கொண்டிருந்த சாவகச்சேரிப் காவல்துறையினன் ஒருவர் அவ்விடத்தில் வந்து பிரச்சினையை விசாரித்துள்ளார்.
இது மகிந்தவின் ஆட்சி இங்கு நாங்கள் என்னவும் செய்வோம் என்று சொல்லி தமிழ் இளைஞர்களை அச்சுறுத்தியுள்ளான்!
[vuukle-powerbar-top]

Recent Post