Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவு

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவைச் சந்தித்திருக்கிறது. இதனால், பெட்ரோல் விலை மீண்டும் ஒருமுறை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டு கடன்பத்திர மதிப்பீட்டை, சர்வதேச தர நிர்ணய நிறுவனமான மூடிஸ், குறைத்து அறிவித்ததன் எதிரொலியாக, ஜனவரி மாத வினியோகத்துக்கான கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆசிய சந்தையில், இது ஒரு பேரலுக்கு 31 சென்ட் குறைந்து, 88.97 டாலரை எட்டியுள்ளது. ரூபாய் மதிப்பில், இது, 0.47 சதவீதம் குறைவு.

இதனால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 4,911 ரூபாயில் இருந்து, 23 ரூபாய் சரிந்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில், மீண்டும் ஒபாமா வெற்றி பெற்றதையடுத்து, கச்சா எண்ணெய் விலை சற்றே குறைந்தது. அதைத் தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருந்த லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அண்மையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ஒரு ரூபாய் 15 காசுகள் குறைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது, பரவலான எதிர்பார்ப்புக்கு வழி ஏற்படுத்தியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post