Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தன் படத்தின் இசை வெளியிடும் நிகழ்வின் அழைப்பிதழில் புதுமை புகுத்திய பாலா.


எப்போதுமே ஒரு படத்தின் இசை வெளியிடும் நிகழ்விற்கான அழைப்பிதழில் அப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் பாடகர்கள் பெயர் மட்டுமே இடம்பெறுவது வழக்கம்.

இதில் ஒரு மாற்றத்தை கொண்டு  வர நினைத்த பாலா,ஒரு படி மேலே சென்று, தன்னுடைய "பரதேசி" படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் இசையமைப்பாளர் மற்றும் அப்படத்தில் பாடல் பாடிய அத்தனை பாடகர்களினதும் உருவப்படத்தை ஓவியமாக வரைந்து அழைப்பிதழை தயாரிக்கவுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமையத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.அத்தோடு வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது "பரதேசி".

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருக்கும் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியாளர்கள் சமபந்தப்பட்ட கதையுடன் கூடிய இப்படத்தில் அதர்வா முரளி, வேதிகா மற்றும் தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post