Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆசிய- பசிபிக் பிராந்திய நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி


ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், விரைவில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே கூறுகையில், ஆசிய நாடுகளில் விரைவான வளர்ச்சி காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் உள்ள நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த விரும்புகிறோம்.
அதன் ஒரு பகுதியாக இம்மாத இறுதியில் தாய்லாந்து, கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு ஒபாமா பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அதேபோன்று இந்த பிராந்தியத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியோன் பனேட்டா, வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரும் பயணம் மேற்கொள்வார்கள்.
கடந்த காலங்களில் செயல்பட்டது போல, ஆசிய நாடுகளுடன் வர்த்தக, பொருளாதார உறவுகளை மேம்படுத்த ஒபாமா நடவடிக்கை எடுக்கவுள்ளார்.
அந்நாடுகளில் ஜனநாயகம், மனித உரிமைகள் உள்ளிட்டவற்றை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post