Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆலோசனை

சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில், தி.மு.க.,வின் ஆதரவை பெறுவதற்காக, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது பற்றிய வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

வாக்கெடுப்பு நடத்தினால் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்படலாம் என்பதால், தி.முக.வை சமரசப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வந்தார். தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

இது குறித்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்,அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில், தி.மு.க.,வின் ஆதரவை பெறுவதற்காக திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததாக தெரிவித்தார். மேலும் அவர், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post