Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆரணி அருகே மனநிலை பாதித்து பெண் தீயால் பலி

ஆரணி அருகே மனநிலை பாதித்து பெண்ணின் உடையில் தீ பிடித்ததும் பரிதாபமாக செத்தார். இது பற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா வடக்குமேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவலிங்கம் என்பவரின் மகள் கீதா என்கிற சீதா (வயது 18) இவர் மனநிலை பாதிக்கபட்டவர். சம்பவத்தன்று அடுப்பில் வெளியான தீப்பொறி சீதா அணியிருந்த நைட்டியில் தீப்பிடித்தது. தீ மளமளவென உடலில் பரவியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டார்.

மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபகமாக இருந்தார். இது குறித்து ஆரணி தாலுகா காவல்துறையில் சிவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
[vuukle-powerbar-top]

Recent Post