Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தீ பிடிக்கும் பொருட்கள் அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது தீயணைப்பு படையினர் அறிவுரை

தீ பிடிக்கும் பொருட்களின் அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என கூடலூர் தீயணைப்பு படையினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயல் முறை விளக்கம் செய்து அறிவுரை வழங்கினர்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீப ஒளி பண்டிகை என்றால் பட்டாசுகளும், புத்தாடை மற்றும் இனிப்பு வகைகளும் தான் முக்கிய இடத்தை பிடித்து வருகின்றன. இருப்பினும் பட்டாசுகள் வெடிக்கும் போது பல இடங்களில் விபத்துகள் நேர்ந்து விடுகின்றன. இத னால் ஆண்டுதோறும் தமிழக தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வரு கின்றன.

பட்டாசுகளை பாதுகாப் பாக வெடிப்பது எப்படி, அப்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கூடலூர் தீயணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் சுப்பிரமணி தலைமையிலான வீரர்கள் கூடலூர் மார்னிங் ஸ்டார் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்தில் மாணவ மாணவிகளுக்கு பட்டாசுகளை வெடிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

அப்போது நீண்ட வத்தி களை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். காலணி களை அணிந்து இருக்க வேண் டும். பட்டாசுகளை வெடிக்கும் போது ஒரு வாளி நிறைய தண்ணீர் வைத்திருக்க வேண் டும். எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை வைத்திருக்க கூடாது. வெடித்த மற்றும் வெடிக்காத பட்டாசு களை தண்ணீர் நிறைந்த வாளியில் போட வேண்டும். குடிசைகள், மின்சாதனங்கள் உள்ள பகுதி யில் ராக்கெட் உள்ளிட்ட வான வெடிகளை வெடிக்க கூடாது.

முகத்தின் அருகே குனிந்த வாறு பட்டாசுகளை வெடிக்க கூடாது. பட்டாசு கடைகள், பெட்ரோல் நிலை யங்கள், ஆஸ்பத்திரிகள், முதி யோர் இல்லங்கள் மற்றும் சாலையின் நடுவில் பட்டாசு களை வெடித்து இடையூறு ஏற்படுத்த கூடாது. எதிர் பாராத விதமாக பட்டாசுகள் வெடிப்பின் போது தீ பிடித்தால் ஓடாமல் உடன டியாக தரையின் கீழே படுத்து உருள வேண்டும். மேலும் குளிர்ந்த நீரை தீக்காயத்தின் மீது ஊற்ற வேண்டும்.

கண்ணில் காயம் ஏற் பட்டால் சுத்தமான குளிர்ந்த நீரில் 10 நிமிடம் கண்களை கழுவி உரிய டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். தீ விபத்து இல்லாத தீபாவளி பண்டிகையை அனைவரும் கொண்டாட முழு ஒத் துழைப்பு அளிக்கும்படி பள்ளி மாணவ மாணவிகளை தீயணைப்பு துறையினர் கேட்டு கொண்டனர். துண்டு பிரசுரம் வினியோகம்

பின்னர் கூடலூர் புதிய, பழைய பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை தீயணைப்பு படையினர் வினியோகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post