Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாவீரர் நாளன்றே கார்த்திகை விளக்கீடு – ஆலயங்கள் மீது இலங்கை படையினர் கெடுபிடி

கிளிநொச்சியில் உள்ள இந்து ஆலயங்களில், கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என்று இலங்கைப் படையினர் ஆலய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

வரும் 27ம் நாள் கார்த்திகை விளக்கீடு இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது. 

அன்றையதினம் மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். 

அதேவேளை, இம்முறை மாவீரர் நாளும், கார்த்திகை விளக்கீடும் ஒரே நாளில் வருவதால், ஆலயங்கள் மீது இலங்கைப் படையினர் கெடுபிடிகளை விதித்து வருகின்றனர். 

மாவீரர் நாளன்றும் மாலை 6.07 மணியளவில் விளக்கு ஏற்றி மாவீரர்களை நினைவு கொள்வது வழக்கமாகும். 

இரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் இடம்பெறவுள்ளதால், ஆலயங்கள் முன் அனுமதி பெற்றே கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று 
இலங்கைப் படைத்தரப்பு அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த காலங்களில், யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் கார்த்திகை விளக்கு ஏற்றியவர்கள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல்களை நடத்திய சம்பவங்கள் பல இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
[vuukle-powerbar-top]

Recent Post