Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நீர் பிரச்சனையின் தீர்வுகளுக்காக


முகநூலில் அருண் பாபு அவர்களால் பதியப்பட்ட பதிவு

 
தீர்களுக்காக...

காவிரி நீர் பிரச்சினை... கிருஷ்ணா நதிநீர் பிரச்சினை... வந்தாரை வாழ் வைத்து பார்த்த தமிழனுக்கு தண்ணீர் பிரச்சினை வரலாற்று பிரச்சினையாகவே அதாவது நம்மாள் அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்லும் பிரச்சினைகளின் ஒன்றாக மாறிவருகிறது.

20 வருடங்களுக்கும் மேலாக காவிரி நீர் பிரச்சினை நீடிக்கிறது. கிருஷ்ணா நீரும் அதேபோல... இந்தியாவின் நீண்ட நாள் திட்டங்களில் ஒன்றுதான் நதிநீர் இணைப்பு திட்டம். அதாவது நீண்டகால நீர்வரத்து கொண்ட கங்கை முதல் காவிரி வரையிலாக இந்திய நீர்ப்பகுதிகளை இணைப்பதுதான் திட்டம்.

இந்த திட்டம் செயல்படுத்தபடுமானால் அதிகபட்ச நன்மை தமிழர்களான நமக்குதான். இயற்கையிலேயே நதிகள் குறைவான மாநிலமான தமிழகம், எல்லா காலங்களிலும் மழையை எதிர்பார்க்க வேண்டியிருப்பது இயற்கையாகிவிட்டது.

மத்திய அரசை பொருத்தவரை நதிநீர் இணைப்பு என்பது பல திட்டங்களோடு ஒன்றாகி இருக்கலாம். ஆனால் மாநில அரசுக்கு மிகப் பெரிய தீர்வாக அமையக்கூடிய இந்தப் பிரச்சினையை தமிழக அரசுகூட வலியுறுத்த முன்வாராதது ஏன் என்பது கேள்விக்குறியே...

இதனால் வட மாநிலங்களை மழைக்கால அழிவுகளிலிருந்து மீட்டெடுக்க முடியும். தென் மாநிலங்களில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் விவசாயம் மேற்கொள்ள வழிவகை ஏற்படும்.

திரு, வாய்பாய் அவர்களின் ஆட்சிகாலத்தில் பரபரப்பாக பேசப்பட்டும் இதற்காக எந்த அரசியல் மற்றும் சமுகம் சார்ந்த விஷயங்களிலும் தன் கருத்தை வெளியிடாத நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இந்த திட்டத்திற்காக நன்கொடை தர விருப்பம் தெரிவித்து இருந்ததும் அப்போதைய நாளேடுகளுக்கு தீனியாக மட்டுமே அமைந்து, பின்பு மறந்துபோனது வருத்தம்.

வாக்குகளுக்காகவும் தங்கள் சுய லாபங்களுக்குமான திட்டங்களை கையிலெடுக்கும் அரசுகள் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினால் காலகாலத்திற்கும் உங்களை எங்கள் மக்கள் மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.
[vuukle-powerbar-top]

Recent Post