Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஹன்ஷிகா அல்லது அமலா பால் இவர்களில் யார் சிம்புவின் தேர்வு?


நடிகர் சிம்புவுடன் ஜோடி சேர்ந்துள்ள தமிழ் சினிமா நாயகிகளுக்கும் அவருக்குமான ஜோடி பொருத்தம் மிக பிரமாதமாக அமைவதுண்டு.நயன்தாரா முதல் த்ரிஷா வரை அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

ஆயினும் தமிழ் சினிமா நாயகிகள் பல பேருடன் டூயட்  பாடியிருக்கும் சிம்புவிற்கு பிடித்த நாயகி யார் என கேள்வி எழுப்பிய போது இருவரது பெயரை சிபாரிசு செய்தார் அவர்.

தமிழ் சினிமா நாயகிகளில் தனக்கு பிடித்த நாயகிகளாக அமலா பால் மற்றும் ஹன்ஷிகா இருப்பதாக தெரிவித்தார் சிம்பு."வாலு" படத்தில் ஹன்ஷிகாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் சிம்பு, "வேட்டை மன்னன்" படத்தில் அமலாவுடன் ஜோடி சேரவிருந்தார் ஆயினும் அது கை கூடவில்லை.

இருப்பினும் தங்கள் நாயகன் அமலா பாலுடன் இணைந்து நடிக்கவிருக்கும் படத்திற்காக காத்திருக்கிறார்கள் சிம்புவின் இரசிகர்கள்.

[vuukle-powerbar-top]

Recent Post