Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தென் தமிழகத்தில் தொடரும் கன மழை ~ சென்னை வானிலை மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியில் பெய்த மழை காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால், தென் மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post