Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பரமக்குடியில் கலவரத்தில் ஈடுபட்ட இரண்டுபேருக்கு குண்டர் சட்டம்

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குரு பூஜைக்கு சென்ற 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இதில் பரமக்குடி பொன்னை யாபுரம் பகுதியில் நடந்த ரெட்டைக்கொலை தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் நவம்பர் 7–ந்தேதி வேந்தோணி கண் மாய் அருகே கீழக்கொடும லூரை சேர்ந்த திருமால் (வயது 39) என்பவரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாக கருதி பரமக்குடி சுந்தர்ராஜ பட்டினத்தை சேர்ந்த சேகர் என்ற விடுதலை சேகர் உள் பட 5 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் விடுதலை சேகர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள் ளார்.

இதேபோல கடலாடி மாணிக்கநாதன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மாசா னம் என்பவரை அரிவாளால் வெட்டியதாக மாணிக்கநா தனை கடலாடி காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல் வேறு வழக்குகள் உள்ளன.

இதுதவிர பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சாதி மோதல்களை தூண் டும் வகையில் செயல்பட்ட தால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு காவல்துறை சூப்பிரண்டு மயில் வாகனன் பரிந்துரை செய் தார்.

அதன் பேரில் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் நந்தகு மார் உத்தரவிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post