Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கைப் படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நினைவு கூரப்பட்ட மாவீரர்கள்

தமிழீழ விடுதலைக்காய் உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கொள்ளும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நேற்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன. 

இலங்கைப் படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியில் தாயகத்திலும், புலம் பெயர் தேசங்களிலும், தமிழ்நாட்டிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. 

நேற்று மாலை 6.07 மணிக்கு சுடர் ஏற்றி தமிழ் மக்கள் மாவீரர்களை நினைவு கூர்ந்துள்ளனர். 

தாயகத்தில், மாவீர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெறுவதை தடுப்பதற்காக இலங்கைப் படையினர் கெடுபிடிகளுடன் இருந்தனர். 

யாழ்.பல்கலைக்கழகத்தில் தீபம் ஏற்றுவதைத் தடுக்க, இலங்கைப் படையினர் மாணவர் விடுதிகளைச் சுற்றிவளைத்து நின்றதுடன், தீபம் ஏற்றிய மாணவர்கள் தாக்கப்பட்டனர். 

அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் படம்பிடிக்க முயன்ற உதயன் ஆசிரியர் பிறேமானந்த் ஆகியோரும் தாக்கப்பட்டனர். 

எனினும், யாழ். பல்கலைக்கழத்தில் மாணவர்கள் சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்துள்ளனர். 

அதேபோன்று பல்வேறு இடங்களிலும் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. 

சுடர் ஏற்றியவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. 

இலங்கைப் படையினரின் கெடுபிடிகளால் தாயத்தில் உள்ள மக்கள் வீடுகளுக்குள் சுடரேற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்தனர். 

அதேவேளை தமிழ்நாட்டில் அகதி முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மாவீர்ர் சுடர் ஏற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. 

புலம்பெயர் தேசங்களிலும், பெருமெடுப்பிலான மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post