Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அஜித்திற்காக எழுதப்படவுள்ள மறக்கமுடியாத சில வசனங்கள்.


தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் நடிகர் அஜித்,தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் இன்னும்  பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் இன்னுமோர் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் அஜித்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி ஹைதராபாத் நகரில் ஆரம்பமாகவுள்ளது.இதற்கிடையே விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் தற்போது அஜித் நடித்து வரும் படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் நவம்பர் 28 ஆம் தேதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

"விஜயா ப்ரொடக்ஷன்ஸ்" தயாரிக்கும் இப்புதிய படத்திற்காக கதை வசனம் எழுதவுள்ளார் ஜெய மோகன்.இப்படத்திற்கான கதையானது தென் தமிழகத்தை ஒட்டியே அமையவுள்ளது.எழுத்தாளர் ஜெய மோகனின் வசனத்தில் வந்த படங்களான "நான் கடவுள்" மற்றும் "அங்காடித் தெரு" போன்ற படங்கள் மிக பெரியளவில் பெயர் வாங்கியிருப்பதால், அஜித்தின் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இப்புதிய படத்தில் அஜித்திற்காக சில மறக்கமுடியாத வசனங்களை ஜெய மோகன் தரக்கூடும் என காத்திருக்கிறார்கள் அஜித் இரசிகர்கள்.

தற்போது மணிரத்னம் இயக்கும் "கடல்" படத்தின் வசன எழுத்தாளராக
ஜெய மோகன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

[vuukle-powerbar-top]

Recent Post