Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆசிட் வீச்சால் பார்வை இழந்த இளம்பெண்

காரைக்காலில் ஆசிட் வீச்சால் பார்வை இழந்த இளம்பெண் வினோதினிக்கு சென்னையில் அதிநவீன சிகிச்சை அளிககப்பட்டு வருகிறது. அவருக்கு செயற்கைத் தோல் மற்றும் கண்கள் பொருத்தப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

23 வயதான வினோதினி சென்னை சைதாபேட்டையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். கடந்த 14 ஆம் தேதி காரைக்காலில், நடந்த ஆசிட் வீச்சில் வினோதினியின் முகம் உருக்குலைந்துவிட்டது. கண் பார்வையையும் அவர் இழந்துவிட்டார்.

வினோதினிக்கு தற்போது சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை தோல், கண்கள் பொருத்த இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.

வினோதினியின் இந்த நிலைக்கு காரணமாக இருந்த அவருடைய முன்னாள் நண்பர் சுரேசை காரைக்கால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, சுரேசுக்கு உதவி செய்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என வினோதியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபரீதமாக மாறிவிட்ட அன்பால் நிகழ்ந்த ஆசிட் வீச்சில் அவரது முகம் மட்டுமல்ல, வாழ்வும் உருக்குலைந்துவிட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post