Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் தயார்

நேரடி அந்நிய முதலீடு தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்ட பின்னர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தாரிக் அன்வர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் எதிர்கட்சிகள் முடக்குவது சரியல்ல என்றும், ஏதாவது பிரச்னைகள் குறித்து பேசவேண்டுமெனில், நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதை ஊடகங்களும் வெளிப்படுத்துகின்றன என்றார்.

மேலும், நாடாளுமன்றத்தை நடத்தவிட மாட்டோம் என எதிர்கட்சிகள் கூறினால் அது சரியல்ல என்றும், நேரடி அந்நிய முதலீடு போன்ற பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில்தான் விவாதிக்க வேண்டும் என்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post