Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி

இலங்கையின் ஆடை ஏற்றுமதி இந்த ஆண்டில் 4.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இந்த வீழ்ச்சிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்வி குறைந்து போனதே காரணம் என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளிலும், அமெரிக்காவுக்கான ஆடைஏற்றுமதி அதிகரித்துள்ள போதிலும் இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 4.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இந்த ஆண்டில் அமெரிக்காவுக்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதி 6 வீதம் அதிகரித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் 537 மில்லியன் டொலர் ஆடை ஏற்றுமதிக்கான கேள்வி அமெரிக்காவிடம் இருந்து கிடைத்திருந்தது. 

இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் 40 வீதம் அமெரிக்காவிலேயே தங்கியுள்ளது. 

அதேவேளை, இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் 50 வீதம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கே மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post