Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் காவல்துறையினர் திடீர் சோதனை

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் கைதிகள் சிறையில் இருந்து கொண்டே கைபேசியில் பேசுவதும், போதை பொருட்கள் கைதிகளுக்கு எளிதாக கிடைப்பதாகவும் வந்த தகவலை அடுத்து இன்று காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

மேலும் கைதிகளுக்கு இத்தகைய வசதிகள் கிடைப்பதற்கு சிறையில் உள்ள ஒரு சில அதிகாரிகள், ஊழியர்கள் இலஞ்சம் வாங்குவதாகவும் சிறைதுறை இலஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் காவல்துறையினர் அங்குள்ள ஊழியர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post