Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுக்காக பூஜை செய்ய வேண்டுமாம்!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பின் மூன்றாவது வருட நினைவைக் கொண்டாடும் முகமாக எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ஒரு வார காலப் பகுதிக்குள் அனைத்து சமய தலங்களிலும் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கேட்டுள்ளார்.

அதற்கமைய மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் குறித்த பிரதேசங்களில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒரு வார காலப் பகுதிக்குள் நடைபெறும் பூஜைகளுக்கு மேலதிகமாக 19 ஆம் திகதி திங்கட்கிழமை அனைத்து இந்து ஆலயங்களிலும் இலங்கை ஜனாதிபதிக்கும், நாட்டிற்கும் நல்லாசி வேண்டி சிறப்புப் பூஜைகளை நடத்துமாறும் திணைக்களத்தின் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆலயங்களில் இயன்றளவு சிறப்பாக பூஜைகளை ஒழுங்கு செய்து நடத்துமாறும் போதியளவு பக்தர்களுக்கு அறிவித்தல்களை வழங்குமாறும் ஆலய பரிபாலன சபையினர் வேண்டப்படுகின்றனர் என திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
[vuukle-powerbar-top]

Recent Post