Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வீர முழக்கங்களுடன் இறைக்குருவனாரின் உடல் அடக்கம். தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர் (படங்கள்)



தனித்தமிழ் அறிஞர் தமிழ்தேசிய, தமிழீழ போராளி ஐயா இறைகுருவனார் காலமானார். இன்று அவருடைய நல்லுடல் வீரமுழக்கங்களுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரம் தமிழ்வழி திருமணங்களுக்கு மேல் நடத்தி வைத்தவர், ஒரு தமிழ்வழி திருமணம் நட்த்தி முடித்து சென்னைக்கு திரும்பும் வழியில் தஞ்சையில் இறக்க நேர்ந்தது. இவர் பாவலரரேறு பெருஞ்சித்தரனார் அவர்களின் மூத்த மருமகனும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறுத்த சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் களம் நின்ற வழக்கறிஞர் அன்னையர்க்கன்னியின் தகப்பனாரும் ஆவார். தமிழர் வரலாறு தமிழர் பண்பாடு தமிழ் இலக்கணம் ஆகியவற்றின் மிகப்பெரிய அரிய களஞ்சியம் இவர்..தமிழ் தமிழர் மேன்மையும் நலனையும் ஒரு துளிக்கூட சமரசம் செய்துக் கொள்ளாதவர். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடி. பல நல்ல தமிழ் நூல்களை எழுதியவர். சினிமா மோகம் கொண்டு சென்னைக்கு ஓடிவந்த இளைஞர்களுக்கு இடையில் தனிதமிழ் மேல் இவர் கொண்ட ஆர்வமே இவரை சென்னைக்கு ஓடிவர செய்தது. இவர் சென்னையில் பார்க்க ஆசைப்பட்டு முதலில் பெருமிதமாய் பார்த்த இடம் தனிதமிழ் தந்தை மறைமலை அடிகளாரின் இல்லம்தான். இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரு.ப.ழ.நெடுமாறன், திரு.மணியர்சன் கொளத்தூர் மணி, விடுதலை இராஜேந்தர், இயக்குநர் புகழேந்தி, அறிஞர் கி.த.பச்சையப்பன், அறிஞர் அருளி, பேராசிரியர் இளவரசு, திரு.இளவழகன், ஐயா வளாவன் என பெரும் தமிழறிஞர் கூட்டமும் தமிழ் உணர்வாளர்கள் கூட்டமும் கூடியிருந்தது. தமிழ் தேசிய விடுதலை முழக்கங்களும் சொற்பொழிவுகளும் சேர ஐயா இறைகுருவனார் அவர்கள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 













படங்கள் செய்தி உதவி - காரை மைந்தன்



[vuukle-powerbar-top]

Recent Post