Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரதமரின் விருந்து முயற்சி தோல்வி - நாடாளுமன்றம் இன்றும் முடங்குமா?

பாரதிய ஜனதாவை விருந்து மூலம் சமாதானப்படுத்தும் பிரதமரின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாரதிய ஜனதாவை சமாதானப்படுத்த பிரதமர் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.இந்த விருந்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் அத்வானி,மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்,மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல் நாத்,மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரும் விருந்தில் கலந்து கொண்டனர்.

பாரதிய ஜனதாவை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.இந்த விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. இதனால்,நாடாளுமன்றம் இன்று கூடும் போதும், அமளியால் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post