Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணு உலை போராட்டத்திற்கு ஆதரவாக இடிந்தகரையில் கேரளா இளைஞர் இயக்கம் (படங்கள்)

இன்று இடிந்தகரையில் அணு உலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சாலிடாரிட்டி என்ற கேரள இளைஞர் இயக்கம் அணு உலைப் போராளி உதயகுமார் அவர்களை சந்தித்தது. வந்தவர்கள் வெறும் கையேடு வரவில்லை. கைதாகி விடுதலையான  அணு உலைப் போராளிகளின் குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் எடுத்து வந்தனர். அப்பொருட்களை   அரச பயங்கரவாதத்தினால் பாதிக்கபட்ட போராளிகளுக்கு வழங்கினர். அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மேலும் இவர்கள் தங்கள் இயக்கத்தின் சார்பில் கேரளாவில் நிதி திரட்டி அணு உலை போராட்டத்திற்கு அளித்துள்ளனர். இவர்கள் கூறும் முக்கிய காரணம் அணுஉலை பாதிப்பு ஏற்பாட்டால் சென்னையை விட விரைவில் பாதிப்பு அடைவது திருவனந்தபுரம் தான் என்பது. அவர்கள் தேசத்தின்  வளங்கள் , நிலங்கள் பாதிப்பு அடையும் என்ற காரணத்தில் தான் கேரளா மக்கள் கூடங்குளம் அணு  உலையை எதிர்கின்றனர். 

ஆனால் தமிழ்நாட்டிலோ சில அரசியல் கட்சிகள் அணு உலை வேண்டும் என பிரச்சாரம் செய்து வருவது அவர்களின் தமிழகத்திற்கு விரோதனமான செயல்பாட்டையே காட்டுகிறது . கோலார் தங்க வயலில் அணுக் கழிவுகளை கொட்டுவோம் என முதலில் இந்திய அரசு சொன்ன போது அதை எதிர்த்து கோலார் மக்களும்,  கட்சிகளும் குரல் எழுப்பினர். உடனே கர்நாடகா அரசும் மக்களுக்கு ஆதரவாக தனது எதிர்ப்பை பதிவு செய்தது. அணு உலைக் கழிவுகளை கோலார் தங்க வயலில்  கொட்ட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது. ஆனால் தமிழகத்திலோ எவ்வளவு போராட்டம் செய்தாலும் அரசு அடக்குமுறையை பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது . 

இந்நிலையில் அணு உலைப் போராட்டதிற்கு ஆதரவு தந்த கேரளா இயக்கத்தினரை தமிழக காவல் துறை கைது செய்து விசாரணை நடத்தி உள்ளனர். மனிதாபமான செயலை செய்த கேரளா மக்களை இவ்வாறு நடத்தும் தமிழக காவல் துறையை உதயகுமார் மற்றும் அணுசக்திக்கு எதிரான மக்கள் கண்டித்து உள்ளனர்















[vuukle-powerbar-top]

Recent Post