Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மலாலாவின் தந்தைக்கு தூதரகத்தில் பணி - பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் தந்தைக்கு இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் தூதகரத்தில் வேலை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பெண் கல்விக்கு எதிரான தலிபான்களின் நடவடிக்கைகளுக்கு கணடனம் தெரிவித்து பேசியதை அடுத்து பள்ளிச் சிறுமி மலாலா சுடப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், லண்டனின் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் மலாலாவின் தந்தை ஜியாயூதின் யூசுப்ஸாய் யை பணியில் அமர்த்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. 

ஸ்வாட் பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வந்த அவருக்கு மூத்த அதிகாரியாக பணியில் அமர்த்தப்படுவார் என தெரிகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post