Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க மத்திய அரசுக்கு பயமில்லை: சுஷில் குமார் ஷிண்டே

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறது.

தற்போது, மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, மத்திய அரசுக்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க பயமில்லை என்று கூறியுள்ளார். நாங்கள் பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வேளையில் சுஷில் குமார் ஷிண்டே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post