Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆங் சான் சூச்சிக்கு சர்வதேச ஜவஹர்லால் நேரு விருது

தேசத் தந்தை மகாத்மா காந்திக்குப் பிறகு அகிம்சை முறையைக் கடைப்பிடித்த தலைவர்கள், மக்கள் மனதிலும் இடம் பிடிக்கத் தவறியதில்லை.

அந்த வகையில் நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்கள் வரிசையில் இடம்பிடித்தவர் ஆன் சான் சூச்சி. ராணுவ ஆட்சியில் இருக்கும் மியான்மரில் ஜனநாயகம் மலரச் செய்வதற்காக அயராது போராடும் பெண் தலைவர்.

அடக்குமுறைக்கு அடி பணிந்து விடக் கூடாது என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஜனநாயகச் சின்னம். இப்படி பல வார்த்தைகளில் சூச்சிக்கு உலகம் புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறது. உலகின் உச்சபட்ட அமைதி விருதாக கருதப்படும், நோபல் அமைதிப் பரிசை 1991ம் ஆண்டு வென்றவர். இத்தனை புகழுக்குச் சொந்தக்காரர் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். தலைநகர் டெல்லியில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் மியான்மர் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை ஏற்றும், சோனியா காந்தியின் அழைப்பை ஏற்றும் இந்தியா வந்துள்ள சூச்சி, ஒரு வார காலம் சுற்றுப்பயணம் செய்வார்.

மியான்மரில், ஜனநாயக ஆட்சி ஏற்படுத்துவது குறித்தும், இரு நாடுகளுக்கு இடையோன நல்லுறவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து சூச்சி விவாதிக்க உள்ளார். தனது அரசியல் பயணங்களுக்கிடையே, இன்று வழங்கப்பட உள்ள ஜவர்ஹர்லால் நேரு சர்வதேச விருதைப் பெற்றுக் கொள்ளும் சூச்சி, சொற்பொழிவும் ஆற்றுகிறார்.

மகளிர் கல்லூரியில் உரையாற்றும் சூச்சி : தலைநகர் டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பயின்ற சூச்சி, இந்த சுற்றுப்பயணத்தின் போது அங்குள்ள மாணவிகள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இதன் காரணமாக லேடி ஸ்ரீராம் கல்லூரியே விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்கு பயிலும் மாணவிகள் சூச்சியை நேரில் காண மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

பெங்களூரு, ஆந்திராவுக்கு விஜயம் : பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திற்கும் ஆங் சான் சூச்சி வருகை தர உள்ளார். ஆந்திர மாநிலத்திலுள்ள கிராமங்களுக்கு செல்லும் ஆங் சான் சூச்சி, அங்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு திட்டங்களையும் பார்வையிடுகிறார்.

இந்தியாவில் மேற்கொள்ளும் வளர்ச்சி திட்டங்களை மியான்மரில் செயல்படுத்துவது குறித்த சாத்தியக் கூறுகளை பற்றியும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post