Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கமல் ஹாசனின் "துப்பாக்கி" பாடல்.


அலை செய்திகள் ஏற்கனவே கூறியது போல கமலின் "விஸ்வரூபம்" படத்தில் மொத்தமாக 5 பாடல்கள்   உள்ளன. தற்போது அப்பாடல்கள் பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ளன.

இப்படத்தின் ஆரம்ப பாடலாக வரும் "விஸ்வரூபம்" என்ற பாடலை வைரமுத்து அவர்களின் வரியில் தன் மெல்லிய குரலில் பாடியுள்ளார் சுராஜ் ஜகன்.இப்படத்திற்காக 3 பாடல்களை பாடியுள்ளார் கமல்.அதில் தீவிரவாதிகளை பற்றிய பாடலான "துப்பாக்கி எங்கள் தோளிலே" என்ற பாடலை கமலுடன் சேர்ந்து பாடியுள்ளார் பென்னி தயாள்.

மற்றைய 2 பாடல்களையும் தானே எழுதி பாடியுள்ளார் கமல்.அதில் ஒரு பாடல் "உன்னை காணாத..." என்றும் மற்றைய பாடல் "அணு விதைத்த பூமியிலே..." என்றும் தொடங்குகின்றன.மேற்கூறிய இரண்டு பாடல்களையும் கமலுடன் சேர்ந்து பாடியுள்ளனர் ஷங்கர் மகாதேவன் மற்றும் நிகில் டி சொய்சா.

அதேபோல் விஸ்வரூபம் என்று தொடங்கும் இப்படத்தின் ஆரம்ப பாடலின் ரீமிக்ஸ் பாடலை பாடியுள்ளார் ஷேன் மண்டோன்சா,ஷங்கர் இஷான் லோய் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல் உரிமையை பெற்றுள்ளது "சோனி" இசை நிறுவனம்.நமக்கு கிடைத்த தகவலின் படி வரும் 28 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளிவரும் என தெரிகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post