Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அகதிகளை தடுக்கும் முயற்சியில் அவுஸ்ரேலியா உயர் மட்டக்குழு

இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அகதிகள் அவுஸ்ரேலியா செல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அவுஸ்ரேலியாவின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கை தலைநகர் கொழும்புக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்தக் குழுவினர் இலங்கையின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே, இலங்கை பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது. 

குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் பிரதிச்செயலர் பீற்றர் வர்டோஸ், அவுஸ்ரேலியாவின் எல்லை பாதுகாப்பு தலைமையக தளபதி றியர் அட்மிரல் டேவிட் ஜோன்சன் ஆகியோரை உள்ளடக்கிய இந்தக் குழு, அகதிகள் படகுகள் அவுஸ்ரேலியாவுக்குப் பயணத்தை ஆரம்பிக்கும் திருகோணமலைக்கும் செல்லவுள்ளது.

இதற்கிடையே, தற்போது அவுஸ்ரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் பெரும்பாலானவர்கள் சிங்களவர்களே என்றும், அங்கு நல்ல தொழில் வாய்ப்பு கிடைக்கும் என்பதாலேயே படகுகளில் வருவதாகவும் அவுஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post