Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக யாழ்பாணத்தில் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

இலங்கை யாழ்பாணத்தில் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிச கட்சி கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்தியது. இப்போராட்டத்தின் போது அணு உலையால் ஏற்படும் ஆபத்து குறித்தும் , அதனால் தமிழகத்திற்கும் இலங்கையில் உள்ள தமிழர் நிலப்பகுதிக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. 

முன்னதாக கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு செய்ய இந்தியாவிடம் இலங்கை அரசு  அனுமதி கோரி இருந்தது. ஆனால் அதற்கு இந்தியா திட்டவட்டமாக மறுத்து விட்டது. தமிழினப் படுகொலையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டாலும், அணு உலை விவகாரத்தில் இந்தியா இலங்கையிடம் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. 

இந்த போராட்டம் இந்திய இலங்கை  அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக அமையும் என்று தெரிகிறது. ஒட்டு மொத்த யாழ் மக்களும் இனி வரும் காலங்களில் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இலங்கை அரசும் அணு உலைக் கதிர்வீச்சு குறித்து ஆய்வுகள் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. 










[vuukle-powerbar-top]

Recent Post