Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் ஒருவரை தாக்கிய வழக்கில் விஜயகாந்திற்கு பிணை

் தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

இதனிடையே, நிருபரை தாக்கிய வழக்கில் நேற்று தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விஜயகாந்த் தாக்கல் செய்த பிணை மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

விஜயகாந்த்துக்கு பிணை அளிக்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், வழக்கு விசாரணையின்போது தவறாமல் சமூகமளிக்க  வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விஜயகாந்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை வழங்கியது.
[vuukle-powerbar-top]

Recent Post