Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி மாதம் முதல் தேதியில்

திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி மாதம் முதல் தேதி வெளியிடப்படும் என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர்கள் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும் நீக்கவும் கோரப்பட்ட விண்ணப்பங்கள், கடந்த 20-ந் தேதி வரை பெறப்பட்டதாகக் கூறியுள்ளார்.

அதன் படி, பெயரைச் சேர்க்க கோரி 23 லட்சத்து 37 ஆயிரத்து 934 பேர் மனு அளித்திருப்பதாகவும் அதில் கூறியுள்ளார். பெயர்களை நீக்கக் கோரி 2 லட்சத்து 38 ஆயிரத்து 617 பேரும், திருத்தங்கள் கோரி 2 லட்சத்து 66 ஆயிரத்து 225 பேரும் விண்ணப்பித்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் ஜனவரி மாதம் முதல் தேதி திருத்தப்பட்ட இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் பிரவீண்குமார் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post