Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கமலை குருவாக ஏற்றுக்கொண்ட த்ரிஷா.


எங்களுக்கு கிடைத்த தகவலின்படி தற்போது த்ரிஷா நடித்து வரும் "சமர்" படத்தில் வரும் அவரது கதாபாத்திரத்திற்காக அவரது சொந்த குரலில் த்ரிஷா பேசி நடித்துள்ளார்  என்பதாகும்.திரு இயக்கும் இப்படத்தில் விஷால் ஜோடியாக நடித்துக்கொண்டுள்ளார் த்ரிஷா.

அண்மையில் கமல் ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடித்து வெளியான "மன்மதன் அம்பு" படத்திலேயே முதன்முதலில் தன் சொந்த குரலில் பேசி நடித்திருந்தார் அவர் .இதற்கு முழுக்  காரணம் கமல் ஹாசனே என கூறியிருந்த த்ரிஷா,அன்று அவர் கொடுத்த ஊக்கமே இன்று "சமர்" படத்தில் என்னால் இவ்வளவு அழகாக குரல் கொடுக்க காரணமாக அமைந்ததாகவும், மிக பொறுமையாக சரியான தமிழ் உச்சரிப்பை தனக்கு கமல் கற்றுக்கொடுத்ததாகவும், இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தன்னுடைய குருவாகவே தான் கமலை பார்ப்பதாகவும் அவர்  கூறியுள்ளார்.

அன்று அவர் கொடுத்த பயிற்சியின் ஒரு அங்கம்தான் தான் "மங்காத்தா" படத்தில் தன் சொந்தக் குரலை பயன்படுத்த ஏதுவாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.இனி வரும் தன் படங்களில் தன் கதாபாத்திரத்திற்காக தானே பேசி நடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post