Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒருவகை வைரஸ் காய்ச்சல் கிளிநொச்சி மக்களை வாட்டுகிறது

கிளிநொச்சி மாவட்டத்தில் மழைக்கு பின்னர் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் மக்களிடையே பரவியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக தலையிடி, வாந்தி, உடல் நோவு காணப்படுகின்றன.

இந்தக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் இங்குள்ள மருத்துவ மனைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துக் காணப்படுவதாக கிளிநொச்சி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்த இடங்களுக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அதிகளவில் சென்று வருவதன் காரணமாக டெங்கு பரவக் கூடிய வாய்ப்பு அதிகரிக்கிறது என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். கடந்த ஒரு மாதத்தில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 3 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
மழை காலத்தில் மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; கொதித்தாறிய நீரைப்பருக வேண்டும்; சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; டெங்கு,மலேரியா ஆகிய நோய்கள் பரவும் இடங்களை இனம் கண்டு அழிக்க வேண்டும்; இதன் மூலம் மக்கள் கொடிய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்  இவ்வாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

[vuukle-powerbar-top]

Recent Post