Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தருமபுரி சாதி வன்முறை. நடுவண் புலனாய்வு துறை விசாரணை வேண்டும் - திருமா (படங்கள்)



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் இன்று (19.11.2012) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், தர்மபுரியில் கலவரம் தொடர்ந்து 6 மணி நேரம் நடந்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகளோ, அரசு அதிகாரிகளோ தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணத்துக்காக காதல் செய்து ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லுவது அப்பட்டமான பொய். காதல் என்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். அது எந்த சாதியாளராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தில் தலையிட உரிமை கிடையாது. தர்மபுரியில் காதல் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு வயது குறைவு என்பது அப்பட்டமான பொய். தர்மபுரியில் நடந்த சம்பவத்தை தமிழக காவல்துறையோ, சிபிசிஐடியோ விசாரித்தால் கட்டாயம் உண்மை வெளிவராது. நியாயம் கிடைக்காது.

ஆகவே மத்திய அரசின் மைய புலனாய்விடம் இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். தர்மபுரி கலவரத்துக்கு முழுக்க முழுக்க தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார். இப்போராட்டத்தில் ஆயிரக் கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். 












[vuukle-powerbar-top]

Recent Post