Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

துப்பாக்கி படத்திற்கு கடும் எதிர்ப்பு. விஜய் வீட்டை முற்றுகை செய்ய முடிவு!


நடிகர் விஜய் நடித்து இந்த தீபாவளி நாளில் வெளியான துப்பாக்கி படத்திற்கு இஸ்லாமிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ் படங்களில் வழமை போல் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளது துப்பாக்கி திரைப்படம். முன்பு அர்ஜுன் , விஜயகாந்த்  போன்றவர்கள் தான் இந்திய நாட்டை காப்பது போலவும் தீவிரவாதிகளை ஒடுக்குவது போன்ற கதைகளில் நடித்து ரசிகர்களை உற்சாகப் படுத்துவார்கள். அந்த வரிசையில் இப்போது விஜய்யும் இப்போது களமிறக்கப் பட்டுள்ளார். இந்திய திரைப்படங்கள் பொறுத்தவரை தீவிரவாதிகள் என்றால் அது இஸ்லாமிய மக்கள் தான். இவ்வாறு மக்களிடம் ஒரு தவறான பரப்புரையை மேற்கொண்டுள்ளனர் திரைபடத் துறையினர். இவ்வாறு மக்களிடம் சொல்வதால் இஸ்லாமிய மக்கள் பொது வாழ்கையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். இதனால் இஸ்லாமிய மக்களும் எல்லோரையும் போல் சகஜமாக வாழ்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அவர்களுக்கு தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படுகிறது. 

இந்து மதத் தீவிரவாதிகளை பற்றி எந்த படங்களும் வெளிவருவதில்லை. அவர்கள் செய்யும் படுகொலைகள், அராஜகங்கள் குறித்து யாரும் படம் எடுப்பதில்லை. ஆனால் இஸ்லாமிய மக்களை மட்டுமே இவ்வாறு தீவிரவாதிகளாக சித்தரிப்பது எந்த வகையில் நியாயம் என்று பொங்கி எழுந்துள்ளனர் இஸ்லாமிய மக்கள். துப்பாக்கி படத்தில் முஸ்லீம் மக்களை தீவிரவாதிகளாக காட்டும் காட்சிகளை நீக்க வேண்டும் என இப்பொது முஸ்லீம் இயக்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன. மேலும் இப்படத்தில் இந்திய ராணுவத்தை ஒரு உயர்த்திக் காட்டியுள்ளனர். உலக அளவில் இந்திய ராணுவத்திற்கு அவப்பெயர் உள்ளது . இந்திய ராணுவம் காஷ்மீர், மணிப்பூர் , அஸ்ஸாம் போன்ற எல்லை மாநிலங்களில் பொது மக்களிடம் வெறியாட்டம் ஆடுகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறது. வன்முறையை கட்டவிழ்த்து வருகிறது. அதையெல்லாம் மறைப்பதற்கு இப்படி துப்பாக்கி போன்ற படங்கள் உதவுகிறது என குற்றம் சாட்டுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

இந்நிலையில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதம்மாக விஜய்யின் துப்பாக்கியின் திரைப்படம் இருப்பதால் துப்பாக்கி படத்தின் சில காட்சிகளை நீக்கக் கோரி இந்திய தேசீய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் சகோதரர் தடா ரஹீம் அவர்களின் தலைமையில் இன்று மாலை 3 மணி அளவில் சென்னையில் நடிகர் விஜய் வீட்டை முற்றுகை செய்து போராட்டம் நடத்த உள்ளனர். இதில் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது. நடிகர் விஜய் சார்பில் சிலர் இந்த போராட்டத்தை கைவிடுமாறு இந்திய தேசிய லீக் கட்சியை கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. எவ்வாறாயினும் குறித்த போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய இயக்கங்கள் அறிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post