Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முகநூல் விவகாரம் ~ பெண்களை கைது செய்த காவல்துறை மீது நடவடிக்கை

மும்பையில் சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே மரணமடைந்ததைத் தொடர்ந்து, மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி கிடந்தது குறித்து இரு இளம்பெண்கள் முகநூல் இணையதளப் பக்கத்தில் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். 

இதற்கு சிவசேனா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த இரண்டு இளம்பெண்களும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

முகநூலில் சர்ச்சையை ஏற்படுத்திய கருத்து தொடர்பாக இரண்டு இளம்பெண்கள் கைது செய்யப்பட்ட விவரம் குறித்த அறிக்கையை இன்று மாநில உள்துறை அமைச்சகத்துக்கு காவல்துறை டைரக்டர் ஜெனரல் அனுப்பியிருக்கிறார்.

நான் இதுபற்றி முதல்வர் பிரித்விராஜ் சவானுடன் கலந்து ஆலோசித்து, கைது நடவடிக்கையில் தவறு செய்த காவல் அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் இன்று மும்பையில் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post